ஸ்டிரீட்லிப் (STREETLIB) என்றால் என்ன?

ஒதே திட்டம். ஒரு இனம்.

எமது தகாள்வக ைிளக்க அறிக்வக

நாங்கள் புத்தகங்களை விரும்புகிறோம், நீங்களும்கூட விரும்புகிறீர்கள்; நாங்கள் அவற்றை தாள்களில் விரும்புகிறோம், இருப்பினும் எமது திரைகளிலும் இருப்பதை விரும்புகிறோம். எனவே, புத்தகங்களை விரும்பும் உலக சமூகத்திற்கு புத்தகங்களையும் இ-புத்தகங்களையும் தயாரிப்பது, விநியோகிப்பது மற்றும் வாசிப்பதற்காக நவீனமயமான கருவிகளை உருவாக்கி புத்தக அனுபவத்திற்காக அருமையான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்கிறோம்.

தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்முனைவோர், எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள், மற்றும் பாரம்பரிய வெளியீட்டிலிருந்து தப்பிப்பவர்கள்ஆகியோரின் ஒரு வண்ணமயமான கூட்டணியாக உள்ள நாம் அனைவரும் ஒரு பொதுவான இலக்கினைக் கொண்டிருக்கிறோம்: புத்தகங்கள் என்னவாக இருக்கலாம் என கற்பனை செய்வது, நாம் கற்பனை செய்ததை செயல்படுத்துவது.

முக்கியமான புத்தகங்கள் ஒவ்வொருவருக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்ய விரும்புகிறோம். ஏனென்றால் வார்த்தைகள் என்பது நம் உலகத்தின் நிரலாக்க மொழி, மற்றும் வாசகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களிடையே உள்ள தொடர்புகள், இந்த உலகில் நமது நெட்வொர்க் மற்றும் கற்பனைகளின் பல உலகங்களை உயிரூட்டுகின்றன.

நம்முடைய இனம்